This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

சனி, 13 டிசம்பர், 2014

பதிப்புரை - சிந்தனை வட்டம்

கடந்த இரண்டு தசாப்தங்களாக கல்விசார், அறிவியல் நூல்களை வெளியிட்டு வந்துள்ள எமது "சிந்தனை வட்டம்" வாசக நெஞ்சங்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க தொடர்ந்து இலக்கிய நூல்களையும் வெளியிடவுள்ளதென்பதைத் தங்களுக்கு அறியத்தருவதில் பெருமிதமடைக்கின்றோம். ஈழத்து இலக்கியவானில் தமிழ் பேசும் பெண் எழுத்தாளர்கள் மிகக் குறைவு. அதிலும் முஸ்லிம் பெண் எழுத்தாளர்களோ மிகமிகக் குறைவு. விரல்விட்டு எண்ணக் கூடிய முஸ்லிம் பெண் எழுத்தாளர்களிடையே சகோதரி கலைமகள் ஹிதாயா ரிஸ்வி...

சமர்ப்பணம்

 கரம் பிடித்து மண்ணில் எழுத   கற்றுத் தந்து  கல்வி வித்தினை எந்தன்  கருவில் விதைத்து  முயற்சிக்கனியினை சமூகத்திற்குப்  பிரயோசனம் அளிக்கும் படியாய்  எழுதச் சொன்ன என்னுயிர்  அன்புத் தந்தை  மர்ஹூம் வைத்தியக் கலாநிதி  யூ.எல்.ஏ. மஜீத் (ஜே.பி) அவர்களுக்கு இந்நூல் அன்புக் காணிக்கை ...

மறப்பது எங்ஙனஞ் சேடி....!

கொள்ளை யடித்தன னெந்தன கத்தினைக்  கூடிய மர்ந்தனன் பின்னே - அன்புத்  தொல்லை கொடுத்தனன் தொகை யெனக்குள்ளே  தொடர்ந்து உதித்தனன் கள்வன்  வெள்ளை யுளத்தினில் தாமரை போலவன்  விரிந்து கிடந்தனன் நித்தம்  எல்லையிலாதொரு இன்ப உணர்ச்சியில்  என்னை மயக்கினன் சேடி....!  நந்த வனத்தினி லன்றொரு நாழிகை  நாயகனென் கரம் பற்றி  சிந்தை குளிர்ந்திடச் சேர்த்து அணைத்தின்பச்  சேதிகள் செப்பினன் சேடி  எந்த னெழில்...

தவமழை புனித குர்ஆன்....!

அறியாமை இருளில் மூழ்கி  அகிலத்து மக்க ளெல்லாம்  இறையோனை மறந்து பொல்லா  ஈனராய் வாழ்தல் கண்டு  நெறியோறாய் அவரை மாற்றி  நிம்மதி வாழ்வில் காண  இறையோனின் தூதர் மூலம்  இறங்கிய புனித குர் ஆன்.....! கல்லையே கடவு ளென்று  கண்ணிலா வழி நடந்து  இல்லையோர் தெய்வ மென்று  இதயத்தில் மடமை கொண்டு  புல்லையே பூக்க ளென்று  புனிதத்தை மறந்து நின்றோர்  அல்லலை அகற்ற அல்லாஹ்  அருளிய...

வெள்ளி, 12 டிசம்பர், 2014

விடிவு என்று....??

ஏழைக்கு இல்லை இன்பம்  இருப்பது யாவுந் துன்பம்  கூழையே கண்டால் இன்பம்  கொடுமைதான் வறுமைத் துன்பம்  நாளையோர் விடிவை எண்ணி  நலமுடன் வாழ எண்ணும்  வாழை போல் மடியு மிந்த மாந்தருக் கென்று இன்பம்.....? மாடென உழைத்தே ஈற்றில்  மனத்துயர் மட்டும் மிஞ்சும்  பாடுகள் பட்டே பின்னால்  பலனது பூஜ்ஜியம் தான்  மாடியை நிமிர்ந்து நோக்கும்  மனிதர்கள் இவர் களாலே  மாடிகள் தன்னில் வாழ்வோர்  வதிகிறார்...

துணைவன் வேண்டும்

சீதனம் எதுவு  மில்லைசீ ர்மைக்கு  பஞ்ச மில்லைஆதனம் அதுவும் மில்லைஅழகினில் குறைச் சலில்லைபேதையென்வாழ்வில் ஒன்றாய்பிணைந்திட வரனும் இல்லை !கல்வியும் கற்றேன் - நல்லகனிவினை உளத்தில் பெற்றேன்சொல்லினில் தெளிவு கொண்டேன்சுயநலம் துளியும் இல்லைநல்லதோர் துணைவன் என்னைநாடியே வரவும் இல்லைகுடிசை தான் வாழ்க்கை - ஆனால்கோபுரம் என்றன் உள்ளம்நடிகையாய் வாழ்வில் மாறும்நரித்தனம் எதுவும் இல்லைஅடிமையாய் என்னை அன்பால்ஆண்டிட ஆளன் வேண்டும்அந்நிய நாட்டுக்...

உழைப்பிற்கு ஊதியம் தா....!

கூடையிலே கொழுந் தெடுத்தும்  கூழுக்கே அடி பிடிகள்  கோடையிலும் குளிரினிலும்  கூடுதலை எம் நேரம்  வாடி விடும், ஆனாலும்  வயிற்றுக்கு வழியில்லை...! உழைப்பதற்கு ஊதியத்தை  ஒழுங்கின்றித் தருபவரும்  பிழைப்பிற்கு வழியற்றுப்  பெரும் பாவம் புரிபவரும்  சளைக்காமல் வாழுகின்ற  சந்தோஷ நேர முண்டு....! நாளை வரும் என்று மனம்  நம்பிக்கை கொண்ட தெலாம்  பாழாகிப் போன தந்தோ  படித்திட்ட மாந்த...