This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

சனி, 13 டிசம்பர், 2014

பதிப்புரை - சிந்தனை வட்டம்

கடந்த இரண்டு தசாப்தங்களாக கல்விசார், அறிவியல் நூல்களை வெளியிட்டு வந்துள்ள எமது "சிந்தனை வட்டம்" வாசக நெஞ்சங்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க தொடர்ந்து இலக்கிய நூல்களையும் வெளியிடவுள்ளதென்பதைத் தங்களுக்கு அறியத்தருவதில் பெருமிதமடைக்கின்றோம். ஈழத்து இலக்கியவானில் தமிழ் பேசும் பெண் எழுத்தாளர்கள் மிகக் குறைவு. அதிலும் முஸ்லிம் பெண் எழுத்தாளர்களோ மிகமிகக் குறைவு. விரல்விட்டு எண்ணக் கூடிய முஸ்லிம் பெண் எழுத்தாளர்களிடையே சகோதரி கலைமகள் ஹிதாயா ரிஸ்வி...

சமர்ப்பணம்

 கரம் பிடித்து மண்ணில் எழுத   கற்றுத் தந்து  கல்வி வித்தினை எந்தன்  கருவில் விதைத்து  முயற்சிக்கனியினை சமூகத்திற்குப்  பிரயோசனம் அளிக்கும் படியாய்  எழுதச் சொன்ன என்னுயிர்  அன்புத் தந்தை  மர்ஹூம் வைத்தியக் கலாநிதி  யூ.எல்.ஏ. மஜீத் (ஜே.பி) அவர்களுக்கு இந்நூல் அன்புக் காணிக்கை ...

மறப்பது எங்ஙனஞ் சேடி....!

கொள்ளை யடித்தன னெந்தன கத்தினைக்  கூடிய மர்ந்தனன் பின்னே - அன்புத்  தொல்லை கொடுத்தனன் தொகை யெனக்குள்ளே  தொடர்ந்து உதித்தனன் கள்வன்  வெள்ளை யுளத்தினில் தாமரை போலவன்  விரிந்து கிடந்தனன் நித்தம்  எல்லையிலாதொரு இன்ப உணர்ச்சியில்  என்னை மயக்கினன் சேடி....!  நந்த வனத்தினி லன்றொரு நாழிகை  நாயகனென் கரம் பற்றி  சிந்தை குளிர்ந்திடச் சேர்த்து அணைத்தின்பச்  சேதிகள் செப்பினன் சேடி  எந்த னெழில்...

தவமழை புனித குர்ஆன்....!

அறியாமை இருளில் மூழ்கி  அகிலத்து மக்க ளெல்லாம்  இறையோனை மறந்து பொல்லா  ஈனராய் வாழ்தல் கண்டு  நெறியோறாய் அவரை மாற்றி  நிம்மதி வாழ்வில் காண  இறையோனின் தூதர் மூலம்  இறங்கிய புனித குர் ஆன்.....! கல்லையே கடவு ளென்று  கண்ணிலா வழி நடந்து  இல்லையோர் தெய்வ மென்று  இதயத்தில் மடமை கொண்டு  புல்லையே பூக்க ளென்று  புனிதத்தை மறந்து நின்றோர்  அல்லலை அகற்ற அல்லாஹ்  அருளிய...

வெள்ளி, 12 டிசம்பர், 2014

விடிவு என்று....??

ஏழைக்கு இல்லை இன்பம்  இருப்பது யாவுந் துன்பம்  கூழையே கண்டால் இன்பம்  கொடுமைதான் வறுமைத் துன்பம்  நாளையோர் விடிவை எண்ணி  நலமுடன் வாழ எண்ணும்  வாழை போல் மடியு மிந்த மாந்தருக் கென்று இன்பம்.....? மாடென உழைத்தே ஈற்றில்  மனத்துயர் மட்டும் மிஞ்சும்  பாடுகள் பட்டே பின்னால்  பலனது பூஜ்ஜியம் தான்  மாடியை நிமிர்ந்து நோக்கும்  மனிதர்கள் இவர் களாலே  மாடிகள் தன்னில் வாழ்வோர்  வதிகிறார்...

துணைவன் வேண்டும்

சீதனம் எதுவு  மில்லைசீ ர்மைக்கு  பஞ்ச மில்லைஆதனம் அதுவும் மில்லைஅழகினில் குறைச் சலில்லைபேதையென்வாழ்வில் ஒன்றாய்பிணைந்திட வரனும் இல்லை !கல்வியும் கற்றேன் - நல்லகனிவினை உளத்தில் பெற்றேன்சொல்லினில் தெளிவு கொண்டேன்சுயநலம் துளியும் இல்லைநல்லதோர் துணைவன் என்னைநாடியே வரவும் இல்லைகுடிசை தான் வாழ்க்கை - ஆனால்கோபுரம் என்றன் உள்ளம்நடிகையாய் வாழ்வில் மாறும்நரித்தனம் எதுவும் இல்லைஅடிமையாய் என்னை அன்பால்ஆண்டிட ஆளன் வேண்டும்அந்நிய நாட்டுக்...

உழைப்பிற்கு ஊதியம் தா....!

கூடையிலே கொழுந் தெடுத்தும்  கூழுக்கே அடி பிடிகள்  கோடையிலும் குளிரினிலும்  கூடுதலை எம் நேரம்  வாடி விடும், ஆனாலும்  வயிற்றுக்கு வழியில்லை...! உழைப்பதற்கு ஊதியத்தை  ஒழுங்கின்றித் தருபவரும்  பிழைப்பிற்கு வழியற்றுப்  பெரும் பாவம் புரிபவரும்  சளைக்காமல் வாழுகின்ற  சந்தோஷ நேர முண்டு....! நாளை வரும் என்று மனம்  நம்பிக்கை கொண்ட தெலாம்  பாழாகிப் போன தந்தோ  படித்திட்ட மாந்த...

மனமாற்றம் வேண்டும்.....!

எழுத்தாளர் என்கின்றார் எழுதுவோருள்  இவர் தானாம் மாமன்னர் செப்புகின்றார்  "பழுத்தபழம்" போற் பேசும் இவரோயிங்கு படைத்தவையின் பட்டியலோ பூஜ்ஜியம் தான்  அழுத்தமுடன் எதைச் சொன்னார் புதுமையாக....? அசலுண்மை கடல் நீரா உப்பு என்றார்  வெளுத்த நிறம் பாலென்றார்  வானில் நீந்தும்  வெண்ணிலாவின் ஒளி தன்மை என்று சொல்வார்....! "நா" மெத்தத் தடித்ததனால் "நான்" நானென்று  நலங்கெட்டவார்த்தைகளை கொட்டுகின்றார்  "பா"...

துணிவு வேண்டும்

முயற்சியே எங்கள் பாதை  மகிழ்ச்சியே தேடும் இல்லம்  உயர்ச்சியே அடையும் ஊராம்  உணர்ச்சியே பயணத் தேராம்  அயர்ச்சியை எதிரிப் படையாய்  அழித்து நல் இன்பம் காண்போம்  வியர்வையை வீர வாளாய்  வீசியே உழைத்து வெல்வோம்....! கெட்டதாம் முயற்சி காணாக்  கடமையில் தூய்மை சேரின்  திட்டமாம் கொள்கை நன்றாய்  தீட்டிடும் வெற்றி பாரீர் தொட்டவை பொன்னாய் மாறத்  துணிவு தான் வேண்டும் இங்கே  விட்டது...

வியாழன், 11 டிசம்பர், 2014

தென்றல் ( உருவகக் கதை)

காற்றுகள் பல வந்தும்  கலங்கிடாமல் நிற்கின்ற  ஆற்றலுள் ளொன் நானென்று  அகங்காரம் கொண்ட ஒரு  வாட்டமுள்ள ஆல மரம்  வாழை யொன்றை நோக்கியது சிறியவனே நீ இந்தச்  செகத்தினிலே வாழ்ந்து விடும்  அரு கதையோ சில காலம்  அறிவாயோ என்று ரைத்துப்   பெருஞ் சத்தம் போட்டுத் தன்  பேரிரைச்சலைக் காட்டியது  வாழை மரமோ வாய்திறவா (து) வருத்தமுடன் நிற்கையிலே  காலையிலே வீசிய புயற்  காற்றதனால்...

ஒற்றுமையாய் வாழ்வோம்

பாரினிலே ஏராளம் பிரச்சி னைகள்  பார்த்து விடும் போதினிலே எந்தனுக்குள்  தீராத கவலையோ விண்ணை முட்டும்  சித்தம் மிகக் கலங்கி மிக்க துயரம் நீட்டும் ! இன மத பேதங்கள் தலையைத் தூக்கி  சாக்கடைக்கும் கீழாகச சமூகந் தன்னை  விதியாலே நின்று மிங்கு எதிரா யாக்கி  நெஞ்சத்தில் கடுந் துயரை நிறையச் செய்யும்! ஆதனால் சொதரர்காள்அகிலந் தன்னில்  அனைவருமே ஒற்றுமையால் வாழ்ந்து விட்டால்  பூ தலத்தில்...

நயமடைவார்

ஒவ்வொரு மனிதனும் தன் மனப் போக்கின்படி ,செய லா ற்றுகிறான் - ஆம்இவ்வுல காளும்  இறைவனோ நாம் செலும்பாதையை  மாற்றுகிறான்மனத்தின் இச்சைக்கு மதிப்பு கொடுத்துநடப்பவன் வழி  கெடுவான் - எக்  கணத்திலும்  மனத்தை  கட்டுப் படுத்திவாழ்பவன் மகிழ்ந்திடுவான் !முரணான வழியில்  இன்பங் காணமுனைகிற மனத்தாலே - மனிதன்பரமனின் கோபப் பார்வையிற் படுவான்  தன் சிறு குணத்தாலே !மனமோ ஆன்மாவுக்குள்  ளிருக்கும்சுதந்திரப் பொருளாகும்...

மானிடப் பிறவி

மகிமை மிக்கதோர் மானுடப் பிறவி  அணுவிலும் நுண்ணிய கருவினில் இருந்து  அன்னை வயிற்றினுள் அடக்கமாய் வளர்ந்து  பத்துத் திங்களில் பாரிலே பிறப்பான்....! இருண்ட சூழலை மாற்றிய பின்னே  ஒளி உலகத்தை உவப்புடன் பார்க்க  விழிகள் திறப்பான் விருப்புடன் கை கால்  ஆட்டி மகிழ்ந்து அகிலத்தை ரசிப்பான்.....! தத்தித் திரிந்து தளர்நடை பயின்று  பள்ளிப் பருவ வாசல் ஏறி  இளைஞனாகி என்றும் வனப்புடன்  உலக அரங்கில்...

நல்லோர்க்கே சொர்க்கம்....!

 வாழ்க்கை என்பது சிறிதாகும் - அதில்  வாழும் முறையோ பெரிதாகும்  ஏழைக் கிரங்கி வாழ்வதுவே இனிய  இஸ்லாம் தந்த நெறியாகும்....! குடிசை வாழும் ஏழைகளும் - பெருங்  கோடி சீமான் "ஹாஜி"களும்  முடிவில் சமமாய் மண் மீது - நபி  மொழிந்தவாறு "ஜனாஸா"வே....! போட்டி பொறாமை புகு நெஞ்சம் - பெரும்  பொல்லாப் பழிகள் உறை மஞ்சம்   "ஷைத்தான்கள்" - உடன்  அகற்றி வாழல் அறமாகும்.....! பெண்ணே...

புதன், 10 டிசம்பர், 2014

எழுவோம் இளைஞர்காள்....!

சோம்பலைக் கொள்வோம் நல்ல  சுறு சுறுப்புதனைக் கொள்வோம்  வீம்புகள் பேசிப் பொழுதை  விரயமே பண்ணல் விட்டு  நாம் தொழில் செய்வோம் இந்த  நாட்டையே உயர்த்தி வெல்வோம்.....! பாழ்நிலை மாற்றி யிங்கோர் பசுமையே பூக்கவைப்போம்   ஊழ்வினைப் பயனே என்று  ஒடுங்கிய நிலையைக் கீழே  வீழ்த்தியே வெல்வோம் வாழ்வில்  வெற்றியே சொந்தம் கொள்வோம்.....!  சடைமுடி வளர்ப்பதாலே  தரித்திரம் தீர மாட்டா  உடைகளை...

நாங்கள்....!

கூரையிலே ஆயிரங்கண் கொளுத்தும் வெய்யில்குடியிருக்கும் உல் வீட்டில் மாறி காலம்வாடையிலே உடலுறைந்து போகும் எங்கள்வாழ்க்கையெல்லாம் துன்பமாய் மாறிப் போகும்பாயில்லை படுப்பதற்கு எழுந்து நாங்கள்பசியாற உண்பதற்கு உணவு மில்லைநோயில்லா வாழ்வெமக்கு அமைய வில்லைநொடிப் பொழுதும் எமையின்பம் தழுவ  வில்லைகால் வயிற்ருக் கஞ்சிக்கும் கடும் போராட்டம்கருணையிலா சமூகத்தில் நாமோர் கூட்டம்ஏழ்மை நிலை தானெமக்குத் தோழ ராகும்இம்மையிலே நமது இடம் நரகமாகும்பசிவரமே மாத்திரிகைகள்...

குளிர்ந்த மலைகள் சிவப்பேறும்....!

முத்து,கருப்பன்,மூக்காயி - எங்கள் முனியன்,வேலு,முருகாண்டி...!கொத்திப் பிளந்தனர் மலையினையேகூடை சுமந்தனர் முதுகினிலே......!எறும்பு போலச் சோம்பாது - நிதம்எந்திரம் போல உழைத்தனாராம்கரும்பு,கதலி,கனி மரங்கள் - நல்லகாய்கறி யாவும் விதைத்தனராம்ஆணும் பெண்ணும் சமமாக - அங்குஐக்கியமாக உழைத்தனாராம்பாணும்,பருப்பும் பசிக்குண்ண    - அவர்பறந்து உழைத்து மெலிந்தனாராம்கொட்டும் மழையும் குளிரும் பனியும் - நன்குகொளுத்தும் கொடிய வெய்யிலினிலும் ;அட்டைகளிரத்தம்...

அண்ணலை நினைத்து வாழ்வோம்....!

சிலைகளை வணங்கி மாந்தர் - அன்று  சீரழிவுற்றார் என்றோ  மலையொளிர் நிலவாய் எங்கள் - தூய  மா நபி வந்தார் மண்ணில்.....! அறிவினை மறந்தே அன்று - பெண்ணை  அழித்தனர் சிசுவில் கொன்று  நெறியுயர் தீனைக் கொண்டே - நபி  நிலத்தினை வளர்த்தார் நன்றே.....! இஸ்லாம் என்னும் தூய - இறை  நிதியினை மண்ணுக் கீந்து  ஜாஹிலியர் செய்தீமை - கொடும்  அனலினை அணைத்தார் தாமே.....! தொல்லைகள் கடலின் மேலாய் - இங்கு  துலங்கியே...

கல்வித்தாய் அருள வேண்டும்

துள்ளி வரும் வெள்ள மென கல்வித் தாயே  தூயமனத் துள்ளறிவை அள்ளித் தாவேன்  கள்ளமிலா என் நெஞ்சில் கல்வித் தாயே  காதலுடன் கலந்துயர்வு பெற்றுத்தாவேன்....! ஏற்றமுடன் நான் செய்யும் பணியை சிலபேர்  இயலாமையால் இகலும் நிலையைக் கண்டேன்  தூற்றுபவர் தூற்றட்டும் தொடர்ந்து யானும்  தூய பணி புரிந்தவுடன் சுடரைத் தூவேன்....!  காலமெலாம் காசினிக்கு ஏற்றதாக  கனிவோடு பணி புரியக் கருணை செய்வாய்  சீல மோடு...

இறைவனருளை நாடு.....!

மண்ணகத்தில் மதி மயங்கி, வாழுகின்ற மனிதா  எண்ணிப் பாரு இதயந் தன்னில்  இருளை வைத்தால் இனிதா.....? மரணமுண்டு வாழ்க்கையிலே  மறந்து நிற்றல் சரியா.....? இறைவனருள் தன்னை நாடி  இனிமை பேணு நெறியா (ய்) உலகந் தன்னில் உன்னை யாஅல்லாஹ்  உயர்வதாகப் படைத்தான்  கலகம் பண்ணிக் களவு செய்து  காசினியைக் கொடுத்தாய்.....! கடமை ஐந்தை நீ மதித்து  கடவுருளைப் பெறுவாய்  உடமை புனித இஸ்லா மென்று  உணர்ந்து...

முடிவினி மரணம் ....!

துள்ளினேன் இளமை வாழ்வில், துயரினைத் தூர விட்டேன் பள்ளியில் படித்த பின்னே  பதவியும் வந்த தாலே  கொள்ளையாய் இன்பந் தேடி  குவலயம் தனில் - அலைந்தேன். உள்ளத்தே கோடி ஆசை  உதித்தது செயலில் செய்தேன்.......! ஆடினேன் அரங்கில் - புகழை  அங்கும் யான் தேடிக் கொண்டேன், சூடினேன் வெற்றி வாகை  "கலை" யென வாழ்வைக் கொண்டேன்  தேடினேன் செல்வம் கோடி  திருப்தியோ; எனக்கு இல்லை  நாடினார் பல்லோர் என்னை  நாடினேன்...

செவ்வாய், 9 டிசம்பர், 2014

ஓர் ஒற்றைக் குயிலின் ஓலம்.....!

சோலையிலே ஓர் ஒற்றைக் குயில்  சோகக் குரலிலே கூவுதடி  மாலையிலும் அதிகாலையிலும் - அது  வாடி மனம் வெந்து கூவுதடி.....! சின்னஞ் சிறு பராயத்திலே  சேர்ந்த துணை மறைந்தோடியது  வண்ணக் கருங்குயில் தன்துணையை - கிட்டே  வாவென்ற ழைத்துமே கூவுதடி.....! கொஞ்சிக் கலந்துமே மாமரத்தில்  கூடித் துளிர் கொய்து பாடியதும்  நெஞ்சிற் கனவுகள் கூடிடவே - அன்று  நித்தம் குளிர்ந்ததை எண்ணுதடி.....! சோலையிலே பறந்தோடிய...

அபிவிருத்திக்கு இளைஞர் சக்தி

எழிலுறு உலக மாதா  இதமாய் இளைஞர் சக்தி  தொழிலெனும் கருவி கொண்டு  துரத்துதல் ஆகும் பொல்லா  இழிவிருள் வறுமை தன்னை  இரவியை மிளிரும் தூய  இளைஞரே ஓன்று கூடி  இன்பமாய் உழைக்க வாரீர்.....! பள்ளியில் படித்தோம் மேன்மை  பட்டங்கள் பலவும் பெற்றோம்  கொள்கையில் உறுதி பூண்டு  குவலயம் தன்னை மீட்க தெள்ளிய உணர்வினோடு  திறம்பட உழைத்து மண்ணை  வெள்ளிடை மலையாய் என்றும்  விளங்கிட...

வாழும் வழி....!

நடந்ததை நினைத்து வருந்தாமல் - இனி  நடப்பதில் கவனம் செலுத்தி விடு  உடைந்த பாத்திரம் ஒட்டுமுன்னம் - நல்ல  உயரிய பாத்திரம் படைப்பது மேல்   இடரினைக் கண்டு அஞ்சாது - அதை  இதய பலத்துடன் எதிர் கொள்ளு  இறைவனைத் துதித்துக் கண்ணியமாய் - தினம்  கடமையைச் செய்து உயர்வடைவாய்.....! போன "பொழுதுகள்" - திரும்பாது என்றும்  பொய்களும் நிலைத்து வாழாது  மானங்காத்து வாழ்பவரை - இங்கு  மன்பதை என்றும்...

விளையாட்டுக் கலை வளர்ப்போம்

உடலோடு உளத்திற்கும் வலு வளித்து  உறவாடி ஒற்றுமையை வளரவைத்து  திடமான சமுதாயம் வளர்வதற்கு, தேவை நல விளையாட்டுக் கலைகள் என்றும்  சோம்பலோடு சோர்வுதனை மறந்து வாழ  சுறு சுருப்பால் உடலுளத்தில் நிறைவு தோன்ற  "நாம்" என்ற நிலை வளர்த்து நலம் விளைக்க  நாட்டினிலே விளையாட்டுக்கலை வளர்ப்போம்  செகமெங்கும் சென்று விளையாடி நிற்போம்  சிரித்த முகத்தோடு கை கோர்த்து வைப்போம்  நாகத்தொடு தசைபோல நல்லுறவை  நாம்...

திங்கள், 8 டிசம்பர், 2014

ஒற்றுமை.....!

இதயத்தில் இருள் தன்னைக் களைந்தெடுத்து - நல்ல இசை தரும் வீணையாய்க் குடைந்தெடுத்து  உதயத்தில் பூபாளம் மீட்டிடுவேன் - உன்  உயர்வுக்கு நல்வழி காட்டிடுவேன்......! தீமையை முளையிலே தீயிடுவேன் - எந்த  தீயவர் வாழ்க்கையையும் திருத்திடுவேன்  ஆமை போல் அமைதியாய் வாழச் சொல்வேன் - நெஞ்சில்  ஆறுதல் வார்த்தைகள் கூறி வெல்வேன்......! பேசும் மொழி உயிர் மூச்சு என்பேன் - மனிதர்க்குள்  பேதைமை பாராதார் உயர்ந்தோரென்பேன்  கூசும்...

சுமக்கின்றாள்...!

கொட்டும் மலையில் குளிரும் பனியில் கோதை தோய்ந்து மலை மீது எட்டி நடந்து இலைகள் கொய்து ஏங்கும் நெஞ்சம் மிக நோக  அட்டை களிரத்தம் குடிக்கும் போதும் அவளோ கூடை சுமக்கிறாள்....! உதயம் தொடங்கி மாலை வரைக்கும் உழைக்கும் கைஏகள் ஓயாது சதையும் எலும்பும் குளிரில் உறைய சாவுக் கஞ்சா மன தோடு விதி தான் வாழ்க்கை என்றே நொந்து விழி நீர் சிந்தி நடக்கிறாள்....! பள்ளி செல்லும் வயதில் ஏழ்மைப் பளுவைத் தானே சுமக்கிறாள்  கல்வியில்லா வாழ்வை...

புனிதத் திங்கள்....!

மாண்புடன் பொழியும் "ரமழான்" மாதமோ "ரஹ்மத்" தாகும்  நீண்ட நாள் பாவம் யாவும்  நீக்கிடும் புனிதத் திங்கள்  பூண்டிடும் தர்மக் கொள்கை  பூமியில் மலியப் பண்ணும்  ஆண்டியோ டரசன் சேரும்  அறத்தினை வளர்க்கும் மாதம்.....! வஞ்சகம் பொய்மை மாந்தர்  வாழ்வினை அழிக்கும் சூது  நஞ்செனும் செயல்கள் யாவும்  நலமுடன் அறவே நீக்கி  நெஞ்சினில் அன்பு பாசம்  நிறைந்து மே மாந்தர் யாவும்  ஒன்றென மறையோன்...

வரும் மாற்றம்....!

உப்பு நன் நீருள் வீழ்ந்தால்  உடன் கரைந்தழியுமாப் போல்  ஒப்பிலா நட்பும் பொய்மை  குருக்கிடில் அழிந்து போகும்....! ஒளியது மறைந்து போக  உறைந்திடும் இருளைப் போல  வளர்ந்த நல உறவும் தேயும்  வளரும் சந்தேகத்தாலே  ஒரு மொழி பேசும் நல்ல  ஈரின மாந்தர் நம்முள்  பிரிவினை எதனால்.....? நல்ல  புரிந்துணர் வற்ற தாலே  "சீதனம்" தன்னைச் சாடி  சீற்றமாய் எழுது வோரும்  காதலை மறந்து "காசைக்" கண்டிடில்...

கேவலம் வேண்டாம்......!

ஆடையைத் திருத்து நல்ல,  அழகுடல் மறைத்து நில்லு கேடடி உடலைக் காட்டும்  கேவலம் வேண்டாம் சொல்லு.....! அரிவையுன் உடலை றோட்டில்  அளி விழி விருந்தாய் ஆக்கி  சரிவதேன் பண்பை விட்டு  தனித்துவ மரபைக் கூட்டு.....! தொடை இடை தொப்புள் என்று  தொகையுன் வனப்பை எல்லாம்  கடைதனில் பொருளாய் நீயும்  காட்டிடும் நிலையை மாற்று......! தாய் வழி வந்த வுன்றன்  தகமையாம் பண்பை மாற்றி  பேய் நடை போடும்...

ஞாயிறு, 7 டிசம்பர், 2014

அவைகள் மேலே....!

காட்டில் வாழும் மிருகங்கள்  கயமை செய்யா உருவங்கள், நாட்டில் வாழும் மனிதரிலும்  நலமே செய்யும் உருவங்கள்.....! ஏட்டில் படித்த அறிவில்லை  இறையைக் காணும் நெறியில்லை காட்டில் கூடி வாழுகிற காட்சி கூட நாட்டிலில்லை....! உயர்வு தாழ்வு அவைக்கில்லை உலகை ஆளும் ஆவலில்லை கயமை மிருக வாழ்கையிலே கானல் கூட அரிதாகும்....! பொறாமை கொண்ட அகமில்லை புரியுந் தன்மை அவைக்கில்லை கருமை நெஞ்சத் திலுமில்லை காட்டில் ஒன்றாய்க் கூடி வாழும்....! உள்ளம்...

தாய்மை அழகே அழகு......!

மழலையைத் தாங்கிச் செல்லும்  மாதினில் உண்மையான  அன்பினைக் கண்டேன் மண்ணில் அழகெனிற் தாய்மை பேறே.....! "குளு குளு" மழலை தன்னை கொஞ்சிடும் அழகு -  மற்றும் அழுகையைப் பாட்டினிலே அணைப்பதும் அழகு காண்பீர்.....! உலகினில் கருணை வெள்ளம் உருகிடும் தாய்மை யுள்ளம் மலரவள் குழந்தை பெற்றாள் மலர்ந்திடல் மொட்டுத்தானே.....! தாய்மையே பெண்மை வாழ்வில்  தனிநிகர் கனிவு ஆகும் கைகளா அழகு இல்லை  கனிகளா...

யாவரும் கேளீர்....!

சாதி மத பேத மின்றி  சரி சமமாய் மனிதர் நாம்  மேதினியில் ஒரு குடியாய்  மிடுக்காய் நிமிர்ந்து வாழ்வோம்....! சிறிய குருவிக் கூட்டமெல்லாம்  சேர்ந்து இனிதே வாழ்க்கையில்  அறிவிற் சிறந்த மனிதர் நாமும்  அழிவுப் பாதை செல்வதா....? உலகில் வாழும் மனிதர்க்கெல்லாம்  ஓடும் குருதி ஒரே நிறம்  கழகம் பண்ணிக் கடிந்து வாழ்தல்  காட்டு விலங்கின் இழி குணம்.....! பிறப்பில் மனிதர் எவருமிங்கு  பெரிது...

தாய்த் தமிழே வாழி...!

வள்ளுவர் இளங்கோ கம்பன்  வழிதனில் புலவர் கோடி  தெள்ளிய கவிதை பாடி  தேனெனச் சுவைக்க நாமும்  அள்ளியே பருகி இன்ப  அருவியில் குளித்து நித்தம்  தொல்லைகள் மறக்க வைக்கும்  சுந்தரத் தமிழே வாழி....!  பாரதி உமறு சித்திலெவ்வை நல்ல - இக்பால், பாரதிதாசன் போன்றோர்  ஆரமாய்ச் சூடி யுன்னை  அளவிலா இன்பங் கண்டார்  சேர்ந்திடும் வறுமை துன்பம்  சிதைவுறு வாழ்க்கை கண்டும்  சோர்ந்திடாதுன்னைப்...

உலக சமாதானமும் இளைஞனும்

விமான மொடு "ராக்கட்" ஏறி  விண்ணகம் அளந்த போதும்  இமாலய முகத்தைத் தொட்டு  எளிதெனக் கண்ட போதும்  சமாதானம் என்ற காற்று  தரணியில் வீசும் வண்ணம்  அமைதியைப் பேணும் பண்பு  அகன்றிடில் இன்பமேது? சாதியைத் தகர்த்து மண்ணில்  சமத்துவம் தன்னைப் பேணி  நீதியை வளர்த் துயர்த்தி  நிலத்திடை அமைதி கண்டு  சாதனை இதுவே என்று  சகலரும் ஒன்று பட்டு வேதனை அறுந்து சாய  வினை செயல்...

வெள்ளி, 5 டிசம்பர், 2014

கொடிய போர்ப் பேயே ஓடு....!

மண்ணிலே அமைதி யோங்க  மனமெலாம் மகிழ்வு தேக்க  புண்ணிய பூமியாகப்  புலர்ந்திடப் போரே ஓடு....! மனிதனை மனிதம் சாய்த்து   மாண்பினை அளித்து வீழ்த்திச்  சனியனாய் ஆட்டம் போடும்  சண்டையே விரைந்து போ நீ....! ஆயுத மேந்தி நாளும்  அழிவுறும் அவலம் நீங்கி  தாயுடன் பிள்ளை யாகத்  தழுவிடப் போரே ஓடு....! வீட்டினுக் கெரியை யூட்டி  வீதியில் பிணத்தைக் கூட்டி  கூட்டு வாழ்க்கையைக்...

ஓரணி சேர்வோம்

புதுப்புது இலக்கிய வடிவம்  பொலிவுடன் பூமியில் படைப்போம், எதுசரி, எது பிழை எனவே  ஆய்ந்தொரு முடிவினை எடுப்போம்....! இலக்கியவாதிகள் மோதி  ஈன நிலைக் கடிகோலி   கலக்கிடும் போக்குகள் வேண்டாம்  கை கோர்த் தொழுகுதல் வேண்டாம்....! சுவைஜர் தம் மனப்பசி  தீர  துயர் நிலை அடியோடு மாற  சமைத்திடுவோம் நவ கலைகள்  சாதனைக் கிங்கில்லை விலைகள....! வீழ்ந்தவர் எழுந்திடும் வழிகள்  விளம்பிடும்...

அந்த நாள் என்று வரும்

உழைத்துழைத்து நாமுந்தான் ஒடாய்த்தேய  உழையாதார் ஊதித் தான் பெருக்கக் கண்டோம்  இழைத்தே நாம் இடுப்பொடிய ஈரமில்லா  இதையத்தார் இழுத்துறிஞ்சி மேலே சென்றார்.....! முதுகினிலே கூடையினைத் தாங்கி நாமும்  முதுகொடியக் கொழுந்தெடுத்துக் கொணர்ந்து சேர்த்தோம்  புதுவாழ்வு எதுவும் நாம் கண்டதில்லை  புல்லர்கள் வாழ்வுக்கே உரமாயப் போனோம்  ஓட்டை "லயம்"தானெமது உலகும் வாழ்வும், உழைப்புத்தான் உயிர் எமக்கு,   காட்டையெல்லாம்...

புதன், 3 டிசம்பர், 2014

ஹாஜிகளே வருக வருக...!!

ஐம் பெரும் கடமை தனி லொன்றை  அழகுறு மக்கா நகர் சென்று  பொய்மையில்லா நெஞ்சோடு  புனிதமுடனே நிறைவேற்றி  மெய்மை யிறை யோன் அருள் பெற்று  மிளிரும் ஹாஜிகாள் வருக....! புனித மதினா நகர் சென்று  அண்ணல் நபியின் சியாரத்தை  பெருமையாகத் தரிசித்தே  பேறு  பெற்றே திரும்பி வரும்  அரிய ஹாஜிகாள் வருக வருக  அல்லாஹ் அருளால் நலம் பெருக.....! "சபாமர்வா" இடைநடுவில்  சந்தம் திகழும்...

ஹஜ்ஜினைப் புகழ்ந்து பாடுங்கள்......!

"ஹஜ்"ஜினைப் புகழ்ந்து பாடுங்கள்  - புனித  "க / பா"   விலே ஓன்று கூடுங்கள் இஸ்மாயில் நபியின் தியாகத்தை - நீங்கள்  இதயத்திலே நினைவு கூறுங்கள்...! "ஸம்ஸம்" தண்ணீரை அருந்துங்கள் - புனித  தியாக நாளில் மனம் திருந்துங்கள்  இம்மையிலே ஆறாம் பேணுங்கள் - முடிவில்  இறையோனின் அருட்பதம் காணுங்கள்.....! மக்காவில் சனவெள்ளம் பாருங்கள் - அந்த  மாண்பினிலே களி கூறுங்கள்  தக்கோராய்த்  தரணியில்...