This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

ஞாயிறு, 7 டிசம்பர், 2014

தாய்த் தமிழே வாழி...!


வள்ளுவர் இளங்கோ கம்பன் 
வழிதனில் புலவர் கோடி 
தெள்ளிய கவிதை பாடி 
தேனெனச் சுவைக்க நாமும் 
அள்ளியே பருகி இன்ப 
அருவியில் குளித்து நித்தம் 
தொல்லைகள் மறக்க வைக்கும் 
சுந்தரத் தமிழே வாழி....! 

பாரதி உமறு சித்திலெவ்வை நல்ல -
இக்பால், பாரதிதாசன் போன்றோர் 
ஆரமாய்ச் சூடி யுன்னை 
அளவிலா இன்பங் கண்டார் 
சேர்ந்திடும் வறுமை துன்பம் 
சிதைவுறு வாழ்க்கை கண்டும் 
சோர்ந்திடாதுன்னைப் பாடி 
சுகம் பல கண்டார் அம்மா....! 

வாழ்வினைத் துறந்தோர் கூட 
வடிவுனைத் துறந்த தாரில்லை 
தாழ்விலா நிலையிலிந்தத் 
தரணியோர் புகழ்ந்து போற்றும் 
நீள் பலம் பெருமை யோடு 
நித்தமும் வாழு மெங்கள் 
வீழ்வுறா மொழியே என்றும் 
வீறுடன் வாழ்க நீடு....!

உலக சமாதானமும் இளைஞனும்



விமான மொடு "ராக்கட்" ஏறி 
விண்ணகம் அளந்த போதும் 
இமாலய முகத்தைத் தொட்டு 
எளிதெனக் கண்ட போதும் 
சமாதானம் என்ற காற்று 
தரணியில் வீசும் வண்ணம் 
அமைதியைப் பேணும் பண்பு 
அகன்றிடில் இன்பமேது?

சாதியைத் தகர்த்து மண்ணில் 
சமத்துவம் தன்னைப் பேணி 
நீதியை வளர்த் துயர்த்தி 
நிலத்திடை அமைதி கண்டு 
சாதனை இதுவே என்று 
சகலரும் ஒன்று பட்டு
வேதனை அறுந்து சாய 
வினை செயல் இளைஞர்பங்கே...!

 வேர் அற மரங்கள் சாயும் 
வீழ்ந்திடும் இலைகள் காயும் 
நீர் இல்லாப் பயிர்கள் யாவும் 
நிச்சயம் வாடிச் சாகும்,
பார்தனில் வாழும் மக்கள் 
பண்புடன் சேர்த்து வாழும் 
சீர்மை தான் மறந்து போகில் 
செகந்தனில் அமைதி சாகும்....!

பூமியை சுவர்க்க மாக்கி 
பொலிவினை முகங்கள் தேக்கி 
தேமது ரத்து வெள்ளம் 
திரட்சியாய் எங்குமோட 
நா மெலாம் ஓன்று பட்டு 
நற்சமா தானந் தன்னை 
வாருடன் வளர்ப்ப தொன்றே 
வழி யெனக் கண்டு சேர்வோம்....!

இன மத வேறு பாடு 
இழி வெனக் கண்டு ணர்ந்து 
மனந் தனில் மனிதர் யாவும் 
ஓர் குளம் என்ற எண்ணம் 
கணிந்திடில் மோதல் யாவும் 
கரைந்துமே அமைதி பூக்கும் 
சினமது தீர்ந்து போனால் 
செக மெலாம் செழிப்புத் தானே.....?

அவர் மொழி அவரவர்க்கு 
அன்னையின் வடிவமாகும்
எவர் மனத் துள்ளு மிந்த 
எண்ணமே உறைய வேண்டும் 
சுவர்தனைப் போட்டு வீணே 
துயரினை வளர்த்தல் கூடா 
சுவர்க்கமே உண்டு பண்ண 
துணிந்தெழு இனைஞ நீயும்....!

சுதந்திரம் மானிடர்க்கு 
சொந்தமாம் என்ற வுண்மை 
நிரந்தரம் வாழு மாகில் 
நிலத்திடை அமைதி பூக்கும் 
இதமுடன் உலகு வாழும் 
இளைஞர்காள் ஓன்று கூடி 
நிதமிதை வளர்த்து மண்ணில் 
நிம்மதி காக்க வாரீர்....!

வெள்ளி, 5 டிசம்பர், 2014

கொடிய போர்ப் பேயே ஓடு....!



மண்ணிலே அமைதி யோங்க 
மனமெலாம் மகிழ்வு தேக்க 
புண்ணிய பூமியாகப் 
புலர்ந்திடப் போரே ஓடு....!

மனிதனை மனிதம் சாய்த்து  
மாண்பினை அளித்து வீழ்த்திச் 
சனியனாய் ஆட்டம் போடும் 
சண்டையே விரைந்து போ நீ....!

ஆயுத மேந்தி நாளும் 
அழிவுறும் அவலம் நீங்கி 
தாயுடன் பிள்ளை யாகத் 
தழுவிடப் போரே ஓடு....!

வீட்டினுக் கெரியை யூட்டி 
வீதியில் பிணத்தைக் கூட்டி 
கூட்டு வாழ்க்கையைக் கொள்ளும் 
கொடிய போர்ப் பேயே ஓடு.....!

அமைதியே சொர்க்க மாகும் 
ஆனந்த வெல்ல மாதே 
சம்ரெனும் கொடிய நோயே 
தரணியை விட்டு ஓடு.....!

ஓரணி சேர்வோம்




புதுப்புது இலக்கிய வடிவம் 
பொலிவுடன் பூமியில் படைப்போம்,
எதுசரி, எது பிழை எனவே 
ஆய்ந்தொரு முடிவினை எடுப்போம்....!

இலக்கியவாதிகள் மோதி 
ஈன நிலைக் கடிகோலி  
கலக்கிடும் போக்குகள் வேண்டாம் 
கை கோர்த் தொழுகுதல் வேண்டாம்....!

சுவைஜர் தம் மனப்பசி  தீர 
துயர் நிலை அடியோடு மாற 
சமைத்திடுவோம் நவ கலைகள் 
சாதனைக் கிங்கில்லை விலைகள....!

வீழ்ந்தவர் எழுந்திடும் வழிகள் 
விளம்பிடும் கவியோடு கதைகள் 
ஆழ்ந்த நல அறிவினைப் பிழிந்து 
ஆக்கிடுவோம் ஓன்று கலந்து....!

எழுத்தினுக் கெதிர் முனையாக 
இலக்கிய வாதியின் வாழ்க்கை 
பிழைபடும் இழிநிலை மாறி 
பிழையற ஒழுகுதல் வேண்டும் 

வாழ்வொரு சிறுதுளி அரிய 
வளர் கலை உலகினில் பெரிது 
பாழ் நிலை அகன்றிட உழைப்போம் 
படைப்பாளிகள் கைகளைப் பிணைப்போம்.......!

அந்த நாள் என்று வரும்



உழைத்துழைத்து நாமுந்தான் ஒடாய்த்தேய 
உழையாதார் ஊதித் தான் பெருக்கக் கண்டோம் 
இழைத்தே நாம் இடுப்பொடிய ஈரமில்லா 
இதையத்தார் இழுத்துறிஞ்சி மேலே சென்றார்.....!

முதுகினிலே கூடையினைத் தாங்கி நாமும் 
முதுகொடியக் கொழுந்தெடுத்துக் கொணர்ந்து சேர்த்தோம் 
புதுவாழ்வு எதுவும் நாம் கண்டதில்லை 
புல்லர்கள் வாழ்வுக்கே உரமாயப் போனோம் 

ஓட்டை "லயம்"தானெமது உலகும் வாழ்வும்,
உழைப்புத்தான் உயிர் எமக்கு,  
காட்டையெல்லாம் கழனிகளாய்ச்செய்தோம் எங்கள் 
கனவுகளோ கண்ணீரில் கரையக் கண்டோம் 

மலையகத்து இலைகளுக்கு பசுமை சேர்க்க 
மணிமணியாய் வியர்வையினை வடித்துத் தந்தோம் 
 எம் வாழ்வில் பசுமை பூத்து 
நிம்மதியாய் வாழும் நாள் என்று பூக்கும்

புதன், 3 டிசம்பர், 2014

ஹாஜிகளே வருக வருக...!!




ஐம் பெரும் கடமை தனி லொன்றை 
அழகுறு மக்கா நகர் சென்று 
பொய்மையில்லா நெஞ்சோடு 
புனிதமுடனே நிறைவேற்றி 
மெய்மை யிறை யோன் அருள் பெற்று 
மிளிரும் ஹாஜிகாள் வருக....!

புனித மதினா நகர் சென்று 
அண்ணல் நபியின் சியாரத்தை 
பெருமையாகத் தரிசித்தே 
பேறு  பெற்றே திரும்பி வரும் 
அரிய ஹாஜிகாள் வருக வருக 
அல்லாஹ் அருளால் நலம் பெருக.....!

"சபாமர்வா" இடைநடுவில் 
சந்தம் திகழும் "தொங்கோட்டம்"
சுபமாய் ஏழு முறை யோடிச் 
சுவைக்கும் "ஸம்ஸம்" தண்ணீரில் 
தாகம் தீர்த்து உளம் மகிழ்ந்த 
தகை சேர் ஹாஜிகாள் வருக....!  

மினா பள்ளத் தாக்கினிலே 
மேன்மை இப்றாஹீம் நபி செய்த 
தனயன் இஸ்மாயிலின் தியாகம் 
தம்முன் ஏற்று மன நிறைவாய்ப் 
புனிதம் பெற்ற ஹாஜிகளே 
புன்னகை சிந்தியே வாருங்கள்....!

ஹஜ்ஜினைப் புகழ்ந்து பாடுங்கள்......!


"ஹஜ்"ஜினைப் புகழ்ந்து பாடுங்கள்  - புனித 
"க / பா"   விலே ஓன்று கூடுங்கள்
இஸ்மாயில் நபியின் தியாகத்தை - நீங்கள் 
இதயத்திலே நினைவு கூறுங்கள்...!

"ஸம்ஸம்" தண்ணீரை அருந்துங்கள் - புனித 
தியாக நாளில் மனம் திருந்துங்கள் 
இம்மையிலே ஆறாம் பேணுங்கள் - முடிவில் 
இறையோனின் அருட்பதம் காணுங்கள்.....!

மக்காவில் சனவெள்ளம் பாருங்கள் - அந்த 
மாண்பினிலே களி கூறுங்கள் 
தக்கோராய்த்  தரணியில் வாழுங்கள் - இறையோன் 
தந்திட்ட குர்ஆனை ஓதுங்கள்......!

ஆடை அணிமணி பூணுங்கள் - தூய 
அல் - ஹஜ்ஜை ஏழையில் காணுங்கள் 
மூடத்தனங்களைச் சாடுங்கள் - நல்ல 
மூ /மின்கள்  அறவழி நாடுங்கள்....!

இஸ்லாம் வழி சென்று உய்யுங்கள் - நல்ல 
இதயமுடன் "ஸக்காத்" செய்யுங்கள் 
கசியும் உளங்கொண்டு நில்லுங்கள் - ஏழை 
கண்ணீரைத் துடைத்தின்பம் கொள்ளுங்கள்.....!

"ஹஜ்"ஜினைப் புகழ்ந்து பாடுங்கள்  - புனித 
"க / பா"   விலே ஓன்று கூடுங்கள்
இஸ்மாயில் நபியின் தியாகத்தை - நீங்கள் 
இதயத்திலே நினைவு கூறுங்கள்...!