வாழ்க்கை என்பது சிறிதாகும் - அதில்
வாழும் முறையோ பெரிதாகும்
ஏழைக் கிரங்கி வாழ்வதுவே இனிய
இஸ்லாம் தந்த நெறியாகும்....!
குடிசை வாழும் ஏழைகளும் - பெருங்
கோடி சீமான் "ஹாஜி"களும்
முடிவில் சமமாய் மண் மீது - நபி
மொழிந்தவாறு "ஜனாஸா"வே....!
போட்டி பொறாமை புகு நெஞ்சம் - பெரும்
பொல்லாப் பழிகள் உறை மஞ்சம்
"ஷைத்தான்கள்" - உடன்
அகற்றி வாழல் அறமாகும்.....!
பெண்ணே வாழ்வின் கண்ணாகும் - அவள்
பெருமையின் அளவோ விண்ணாகும்
இன்னல் தன்னை அவர்க் கூட்டல் - உயர்
இஸ்லாத்திற்கே முரணாகும்.....!
ஏழைப் பெண்ணைக் கரம்பிடிப்போன் - தூய
இறையோன் கருணைதனைப் பெறுவான்
நாளும் பொழுதும் அன்புடனே வாழும்
நல்லோர்க் கென்றும் சுவர்க்கம் மெய்......!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக