திங்கள், 8 டிசம்பர், 2014

சுமக்கின்றாள்...!



கொட்டும் மலையில் குளிரும் பனியில்
கோதை தோய்ந்து மலை மீது
எட்டி நடந்து இலைகள் கொய்து
ஏங்கும் நெஞ்சம் மிக நோக 
அட்டை களிரத்தம் குடிக்கும் போதும்
அவளோ கூடை சுமக்கிறாள்....!

உதயம் தொடங்கி மாலை வரைக்கும்
உழைக்கும் கைஏகள் ஓயாது
சதையும் எலும்பும் குளிரில் உறைய
சாவுக் கஞ்சா மன தோடு
விதி தான் வாழ்க்கை என்றே நொந்து
விழி நீர் சிந்தி நடக்கிறாள்....!

பள்ளி செல்லும் வயதில் ஏழ்மைப்
பளுவைத் தானே சுமக்கிறாள் 
கல்வியில்லா வாழ்வை எண்ணிக்
கலங்கி மலையில் தவழ்கின்றாள்
அல்லும் பகலும் உழைத்தும் ஓட்டை
"லயத்தில்" உறங்கா திருக்கின்றாள்...!

தொட்டிற் குழந்தை "ஏணைக்குள்ளே"
தூங்க வைத்தே அதைப்பிரிந்து
எட்டாதுயர்ந்த உச்சி மலையில்
ஏறிக் கொழுந்து மிகக் கொய்தும்
வாடும் நிலையை நாளும் கொண்டு
வறுமை தனையே சுமக்கின்றாள்...!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக