ஞாயிறு, 7 டிசம்பர், 2014

தாய்த் தமிழே வாழி...!


வள்ளுவர் இளங்கோ கம்பன் 
வழிதனில் புலவர் கோடி 
தெள்ளிய கவிதை பாடி 
தேனெனச் சுவைக்க நாமும் 
அள்ளியே பருகி இன்ப 
அருவியில் குளித்து நித்தம் 
தொல்லைகள் மறக்க வைக்கும் 
சுந்தரத் தமிழே வாழி....! 

பாரதி உமறு சித்திலெவ்வை நல்ல -
இக்பால், பாரதிதாசன் போன்றோர் 
ஆரமாய்ச் சூடி யுன்னை 
அளவிலா இன்பங் கண்டார் 
சேர்ந்திடும் வறுமை துன்பம் 
சிதைவுறு வாழ்க்கை கண்டும் 
சோர்ந்திடாதுன்னைப் பாடி 
சுகம் பல கண்டார் அம்மா....! 

வாழ்வினைத் துறந்தோர் கூட 
வடிவுனைத் துறந்த தாரில்லை 
தாழ்விலா நிலையிலிந்தத் 
தரணியோர் புகழ்ந்து போற்றும் 
நீள் பலம் பெருமை யோடு 
நித்தமும் வாழு மெங்கள் 
வீழ்வுறா மொழியே என்றும் 
வீறுடன் வாழ்க நீடு....!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக