கடந்த இரண்டு தசாப்தங்களாக கல்விசார், அறிவியல் நூல்களை வெளியிட்டு வந்துள்ள எமது "சிந்தனை வட்டம்" வாசக நெஞ்சங்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க தொடர்ந்து இலக்கிய நூல்களையும் வெளியிடவுள்ளதென்பதைத் தங்களுக்கு அறியத்தருவதில் பெருமிதமடைக்கின்றோம்.
ஈழத்து இலக்கியவானில் தமிழ் பேசும் பெண் எழுத்தாளர்கள் மிகக் குறைவு. அதிலும் முஸ்லிம் பெண் எழுத்தாளர்களோ மிகமிகக் குறைவு. விரல்விட்டு எண்ணக் கூடிய முஸ்லிம் பெண் எழுத்தாளர்களிடையே சகோதரி கலைமகள் ஹிதாயா ரிஸ்வி குறிப்பிடத்தக்கவர்.
மீன்பாடும் தேனாடாம் கிழக்கிலங்கையில் சாய்ந்தமருது பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சகோதரி கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 1980 கலீல் எழுதத் தொடங்கியவர். கவிதை,சிறுகதை,விமர்சனம் என இலக்கியத்தின் பல வடிவங்களில் தனது சுவட்டினைப் பதித்துள்ளவர். இவரால் எழுதப்பட்ட மரபுக்கவிதைகளுள் 40 கவிதைகளைத் தொகுத்து "தேன் மலர்கள்" எனும் மகுடத்தில் நூலாக வெளியிடுகின்றோம்.
இலங்கையில் முஸ்லிம் பெண் எழுத்தாளர் ஒருவரின் முதல் மரபுக்கவிதை தொகுதி என்ற வகையில் இக்கவிதைத் தொகுதி சிறப்புப்பெறும் அதேநேரத்தில், "சிந்தனை வட்ட" வெளியீடுகளுக்குத் தொடர்ந்தும் ஆதரவு தரும் வாசக நெஞ்சங்கள் இந்நூலுக்கும் தமது ஆதரவினைத் தருவார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக