புதன், 3 டிசம்பர், 2014

ஹாஜிகளே வருக வருக...!!




ஐம் பெரும் கடமை தனி லொன்றை 
அழகுறு மக்கா நகர் சென்று 
பொய்மையில்லா நெஞ்சோடு 
புனிதமுடனே நிறைவேற்றி 
மெய்மை யிறை யோன் அருள் பெற்று 
மிளிரும் ஹாஜிகாள் வருக....!

புனித மதினா நகர் சென்று 
அண்ணல் நபியின் சியாரத்தை 
பெருமையாகத் தரிசித்தே 
பேறு  பெற்றே திரும்பி வரும் 
அரிய ஹாஜிகாள் வருக வருக 
அல்லாஹ் அருளால் நலம் பெருக.....!

"சபாமர்வா" இடைநடுவில் 
சந்தம் திகழும் "தொங்கோட்டம்"
சுபமாய் ஏழு முறை யோடிச் 
சுவைக்கும் "ஸம்ஸம்" தண்ணீரில் 
தாகம் தீர்த்து உளம் மகிழ்ந்த 
தகை சேர் ஹாஜிகாள் வருக....!  

மினா பள்ளத் தாக்கினிலே 
மேன்மை இப்றாஹீம் நபி செய்த 
தனயன் இஸ்மாயிலின் தியாகம் 
தம்முன் ஏற்று மன நிறைவாய்ப் 
புனிதம் பெற்ற ஹாஜிகளே 
புன்னகை சிந்தியே வாருங்கள்....!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக