"ஹஜ்"ஜினைப் புகழ்ந்து பாடுங்கள் - புனித
"க / பா" விலே ஓன்று கூடுங்கள்
இஸ்மாயில் நபியின் தியாகத்தை - நீங்கள்
இதயத்திலே நினைவு கூறுங்கள்...!
"ஸம்ஸம்" தண்ணீரை அருந்துங்கள் - புனித
தியாக நாளில் மனம் திருந்துங்கள்
இம்மையிலே ஆறாம் பேணுங்கள் - முடிவில்
இறையோனின் அருட்பதம் காணுங்கள்.....!
மக்காவில் சனவெள்ளம் பாருங்கள் - அந்த
மாண்பினிலே களி கூறுங்கள்
தக்கோராய்த் தரணியில் வாழுங்கள் - இறையோன்
தந்திட்ட குர்ஆனை ஓதுங்கள்......!
ஆடை அணிமணி பூணுங்கள் - தூய
அல் - ஹஜ்ஜை ஏழையில் காணுங்கள்
மூடத்தனங்களைச் சாடுங்கள் - நல்ல
மூ /மின்கள் அறவழி நாடுங்கள்....!
இஸ்லாம் வழி சென்று உய்யுங்கள் - நல்ல
இதயமுடன் "ஸக்காத்" செய்யுங்கள்
கசியும் உளங்கொண்டு நில்லுங்கள் - ஏழை
கண்ணீரைத் துடைத்தின்பம் கொள்ளுங்கள்.....!
"ஹஜ்"ஜினைப் புகழ்ந்து பாடுங்கள் - புனித
"க / பா" விலே ஓன்று கூடுங்கள்
இஸ்மாயில் நபியின் தியாகத்தை - நீங்கள்
இதயத்திலே நினைவு கூறுங்கள்...!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக