வெள்ளி, 5 டிசம்பர், 2014

கொடிய போர்ப் பேயே ஓடு....!



மண்ணிலே அமைதி யோங்க 
மனமெலாம் மகிழ்வு தேக்க 
புண்ணிய பூமியாகப் 
புலர்ந்திடப் போரே ஓடு....!

மனிதனை மனிதம் சாய்த்து  
மாண்பினை அளித்து வீழ்த்திச் 
சனியனாய் ஆட்டம் போடும் 
சண்டையே விரைந்து போ நீ....!

ஆயுத மேந்தி நாளும் 
அழிவுறும் அவலம் நீங்கி 
தாயுடன் பிள்ளை யாகத் 
தழுவிடப் போரே ஓடு....!

வீட்டினுக் கெரியை யூட்டி 
வீதியில் பிணத்தைக் கூட்டி 
கூட்டு வாழ்க்கையைக் கொள்ளும் 
கொடிய போர்ப் பேயே ஓடு.....!

அமைதியே சொர்க்க மாகும் 
ஆனந்த வெல்ல மாதே 
சம்ரெனும் கொடிய நோயே 
தரணியை விட்டு ஓடு.....!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக