சனி, 13 டிசம்பர், 2014

தவமழை புனித குர்ஆன்....!



அறியாமை இருளில் மூழ்கி 
அகிலத்து மக்க ளெல்லாம் 
இறையோனை மறந்து பொல்லா 
ஈனராய் வாழ்தல் கண்டு 
நெறியோறாய் அவரை மாற்றி 
நிம்மதி வாழ்வில் காண 
இறையோனின் தூதர் மூலம் 
இறங்கிய புனித குர் ஆன்.....!

கல்லையே கடவு ளென்று 
கண்ணிலா வழி நடந்து 
இல்லையோர் தெய்வ மென்று 
இதயத்தில் மடமை கொண்டு 
புல்லையே பூக்க ளென்று 
புனிதத்தை மறந்து நின்றோர் 
அல்லலை அகற்ற அல்லாஹ் 
அருளிய புனித குர்ஆன்....!

மங்கையர் தம்மை மண்ணில் 
மதித்திடா வண்ணம் மூடர் 
எங்கணும் கொடுமை செய்யும் 
இழி நிலை தன்னை மாற்றிப் 
பொங்கிடு மொளியை இந்தப் 
பூவுல கெங்கும்  ஏற்றி 
தங்கமாய் இறைவன் தந்த 
தவமழை புனித குர் ஆன்....!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக