உழைத்துழைத்து நாமுந்தான் ஒடாய்த்தேய
உழையாதார் ஊதித் தான் பெருக்கக் கண்டோம்
இழைத்தே நாம் இடுப்பொடிய ஈரமில்லா
இதையத்தார் இழுத்துறிஞ்சி மேலே சென்றார்.....!
முதுகினிலே கூடையினைத் தாங்கி நாமும்
முதுகொடியக் கொழுந்தெடுத்துக் கொணர்ந்து சேர்த்தோம்
புதுவாழ்வு எதுவும் நாம் கண்டதில்லை
புல்லர்கள் வாழ்வுக்கே உரமாயப் போனோம்
ஓட்டை "லயம்"தானெமது உலகும் வாழ்வும்,
உழைப்புத்தான் உயிர் எமக்கு,
காட்டையெல்லாம் கழனிகளாய்ச்செய்தோம் எங்கள்
கனவுகளோ கண்ணீரில் கரையக் கண்டோம்
மலையகத்து இலைகளுக்கு பசுமை சேர்க்க
மணிமணியாய் வியர்வையினை வடித்துத் தந்தோம்
எம் வாழ்வில் பசுமை பூத்து
நிம்மதியாய் வாழும் நாள் என்று பூக்கும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக