உடலோடு உளத்திற்கும் வலு வளித்து
உறவாடி ஒற்றுமையை வளரவைத்து
திடமான சமுதாயம் வளர்வதற்கு,
தேவை நல விளையாட்டுக் கலைகள் என்றும்
சோம்பலோடு சோர்வுதனை மறந்து வாழ
சுறு சுருப்பால் உடலுளத்தில் நிறைவு தோன்ற
"நாம்" என்ற நிலை வளர்த்து நலம் விளைக்க
நாட்டினிலே விளையாட்டுக்கலை வளர்ப்போம்
செகமெங்கும் சென்று விளையாடி நிற்போம்
சிரித்த முகத்தோடு கை கோர்த்து வைப்போம்
நாகத்தொடு தசைபோல நல்லுறவை
நாம் செல்லுமிடமெங்கும் நாட்டி வைப்போம்
வெற்றிக்கு முதற்படியே தோல்வி என்று
விளையாட்டில் சளைக்காது முயன்று வெல்வோம்
கற்றிடுவோம் "கிரிகற்றை" காற்பந்தோடு
கரப்பந்து வலைப்பந்து பூப்பந்தெல்லாம்
நட்புறவு சோதரத்துவம் நல்லிணைப்பு
நல்லபடி அகிலத்தில் வளர்வதற்கும்
கட்டுப்பா டொழுங்கனைத்தும் நிலைப்பதற்கும்
கனிவோடு விளையாட்டுக் கலை வளர்ப்போம்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக