வியாழன், 11 டிசம்பர், 2014

நயமடைவார்


ஒவ்வொரு மனிதனும் தன் மனப் போக்கின்
படி ,செய லா ற்றுகிறான் - ஆம்
இவ்வுல காளும்  இறைவனோ நாம் செலும்
பாதையை  மாற்றுகிறான்

மனத்தின் இச்சைக்கு மதிப்பு கொடுத்து
நடப்பவன் வழி  கெடுவான் - எக்  
கணத்திலும்  மனத்தை  கட்டுப் படுத்தி
வாழ்பவன் மகிழ்ந்திடுவான் !

முரணான வழியில்  இன்பங் காண
முனைகிற மனத்தாலே - மனிதன்
பரமனின் கோபப் பார்வையிற் படுவான்  
தன் சிறு குணத்தாலே !

மனமோ ஆன்மாவுக்குள்  ளிருக்கும்
சுதந்திரப் பொருளாகும் -அதைத்
தினமுஞ் சரிவரப் பேணிடா விட்டால் 
துருபிடித் திருளாகும்!

மனத்தைக் கட்டுப் படுத்தும் - பலத்தை
உடையோர் ஜெயமுடையார் - நல்ல
குணத்தை கொள்கையை கொண்டவர் இருமை
உலகிலும் நயமடைவார் !

0 கருத்துகள்:

கருத்துரையிடுக