திங்கள், 8 டிசம்பர், 2014

கேவலம் வேண்டாம்......!



ஆடையைத் திருத்து நல்ல, 
அழகுடல் மறைத்து நில்லு
கேடடி உடலைக் காட்டும் 
கேவலம் வேண்டாம் சொல்லு.....!

அரிவையுன் உடலை றோட்டில் 
அளி விழி விருந்தாய் ஆக்கி 
சரிவதேன் பண்பை விட்டு 
தனித்துவ மரபைக் கூட்டு.....!

தொடை இடை தொப்புள் என்று 
தொகையுன் வனப்பை எல்லாம் 
கடைதனில் பொருளாய் நீயும் 
காட்டிடும் நிலையை மாற்று......!

தாய் வழி வந்த வுன்றன் 
தகமையாம் பண்பை மாற்றி 
பேய் நடை போடும் பெண்ணே 
பேதையே திருத்திக் கொள்வாய்.....!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக