புதுப்புது இலக்கிய வடிவம்
பொலிவுடன் பூமியில் படைப்போம்,
எதுசரி, எது பிழை எனவே
ஆய்ந்தொரு முடிவினை எடுப்போம்....!
இலக்கியவாதிகள் மோதி
ஈன நிலைக் கடிகோலி
கலக்கிடும் போக்குகள் வேண்டாம்
கை கோர்த் தொழுகுதல் வேண்டாம்....!
சுவைஜர் தம் மனப்பசி தீர
துயர் நிலை அடியோடு மாற
சமைத்திடுவோம் நவ கலைகள்
சாதனைக் கிங்கில்லை விலைகள....!
வீழ்ந்தவர் எழுந்திடும் வழிகள்
விளம்பிடும் கவியோடு கதைகள்
ஆழ்ந்த நல அறிவினைப் பிழிந்து
ஆக்கிடுவோம் ஓன்று கலந்து....!
எழுத்தினுக் கெதிர் முனையாக
இலக்கிய வாதியின் வாழ்க்கை
பிழைபடும் இழிநிலை மாறி
பிழையற ஒழுகுதல் வேண்டும்
வாழ்வொரு சிறுதுளி அரிய
வளர் கலை உலகினில் பெரிது
பாழ் நிலை அகன்றிட உழைப்போம்
படைப்பாளிகள் கைகளைப் பிணைப்போம்.......!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக