உப்பு நன் நீருள் வீழ்ந்தால்
உடன் கரைந்தழியுமாப் போல்
ஒப்பிலா நட்பும் பொய்மை
குருக்கிடில் அழிந்து போகும்....!
ஒளியது மறைந்து போக
உறைந்திடும் இருளைப் போல
வளர்ந்த நல உறவும் தேயும்
வளரும் சந்தேகத்தாலே
ஒரு மொழி பேசும் நல்ல
ஈரின மாந்தர் நம்முள்
பிரிவினை எதனால்.....? நல்ல
புரிந்துணர் வற்ற தாலே
"சீதனம்" தன்னைச் சாடி
சீற்றமாய் எழுது வோரும்
காதலை மறந்து "காசைக்"
கண்டிடில் மாறுகின்றார்.....!
நெஞ்சினில் அன்பு பாசம்
இறைவனின் மாறா நேசம்
விஞ்சிய கல்வி நாட்டம்
விதைந்திடும் உலகில் மாற்றம்....!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக