ஞாயிறு, 7 டிசம்பர், 2014

தாய்மை அழகே அழகு......!



மழலையைத் தாங்கிச் செல்லும் 
மாதினில் உண்மையான 
அன்பினைக் கண்டேன் மண்ணில்
அழகெனிற் தாய்மை பேறே.....!

"குளு குளு" மழலை தன்னை
கொஞ்சிடும் அழகு -  மற்றும்
அழுகையைப் பாட்டினிலே
அணைப்பதும் அழகு காண்பீர்.....!

உலகினில் கருணை வெள்ளம்
உருகிடும் தாய்மை யுள்ளம்
மலரவள் குழந்தை பெற்றாள்
மலர்ந்திடல் மொட்டுத்தானே.....!

தாய்மையே பெண்மை வாழ்வில் 
தனிநிகர் கனிவு ஆகும்
கைகளா அழகு இல்லை 
கனிகளா அழகு சொல்வீர்.....!

விளை நிலம் அழகா சொல்வீர் 
வெறு நிலம் அழகா சொல்வீர் 
அழகில் தாய்மை மேலே 
அடுத்தவை யாவும் கீழே.....!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக