புதன், 10 டிசம்பர், 2014

இறைவனருளை நாடு.....!


மண்ணகத்தில் மதி மயங்கி,
வாழுகின்ற மனிதா 
எண்ணிப் பாரு இதயந் தன்னில் 
இருளை வைத்தால் இனிதா.....?

மரணமுண்டு வாழ்க்கையிலே 
மறந்து நிற்றல் சரியா.....?
இறைவனருள் தன்னை நாடி 
இனிமை பேணு நெறியா (ய்)

உலகந் தன்னில் உன்னை யாஅல்லாஹ் 
உயர்வதாகப் படைத்தான் 
கலகம் பண்ணிக் களவு செய்து 
காசினியைக் கொடுத்தாய்.....!

கடமை ஐந்தை நீ மதித்து 
கடவுருளைப் பெறுவாய் 
உடமை புனித இஸ்லா மென்று 
உணர்ந்து ஏற்று உயர்வை....!

செகத்தை விட்டு ஏகும் போது 
சேர்ந்து என்ன பெருகும்.....?
இகத்தில் செய்த நல் அமல் தான் 
இணையும் அறிந்து ஒழுகு......!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக